இயல் இசை
Total Pageviews
Sunday, 22 February 2015
தாலி கட்டும் தருணத்திலும்
தன்னையே பார்க்கக்
கட்டாயப் படுத்தும் புகைப்படக்காரர்.
ச.பாலசுப்பிரமணிய பாரதி .
நேற்று நட்ட ரோஜா செடியில்
மலரைத் தேடுது
எங்கள் வீட்டுப் பூஞ்சிட்டு ...
ச.பாலசுப்பிரமணிய பாரதி
Saturday, 21 February 2015
ஒரு நேரத்தில் இரு தொழிலாய்...
பாதி சவரத்தில்
கழுத்தில் கத்தி வைத்து
முப்பது லட்சத்தில்-என்னை
புதுவீடு வாங்கச் சொல்லும்
புரோக்கர்-பொன்னுச்சாமி.
-ச.பாலசுப்பிரமணிய பாரதி
அருவிச்சத்தம்
நெட்டுயர்ந்த மரங்கள் ஊடே
தனித்தனிப் பெண்ணைப் போலே
நடந்து வந்த காரணத்தால்
நெஞ்சு பயம் நீக்கிடவே
பொய்யாய் வீரம் கொண்டவள்போல்
ஓங்கிப்பாடும் பாடல் சத்தம்.
-ச.பாலசுப்பிரமணிய பாரதி
Friday, 20 February 2015
ஏனோ வலிக்கிறது ........
பள்ளி செல்லும் நேரம் எல்லாம்
கன்னம் கிள்ளிச் செல்லும் மகள்
ஆட்டோ வந்த அவசரத்தில்
அதை மறந்து போனதனால் ..இதயம்
ஏனோ வலிக்கிறது .
ச.பாலசுப்பிரமணிய பாரதி
மகனும்,மகளும்,
ஏன் மனைவி உட்பட
அனைவருமே அன்னியமாய் பட்டனர்
வீட்டிற்காக வங்கியில் வாங்கிய
கடனைத் தவிர ..............
ச. பாலசுப்பிரமணிய பாரதி .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)