விண்
மதியே
உனக்கு என் தோழமை வந்தனம்
நீ
எனதருமை
சாலையோர பாட்டாளி
குடில்களின்
சோடியம் விளக்கு
நீ
கடலில்
வாழ்வைத் தேடும் மீனவத்
தோழருக்கு
நட்பான காலக்கடிகை
நீ
காலம்காலமாய்
குழவிப் பருவத்தின்
தொலைதூர
நண்பன்
நீ
இம் மானுடத்திற்கோர்
தத்துவஞானி
ஏன்என்றால்
குருவிடம்
தாம்கற்ற கல்விதனை
கற்றோர்சபைதனில்
தருணத்தில்
உரைத்து
வெல்வதுபோல்
பகலவனின்
ஒளிதன்னை
திறம்படவே
உள்வாங்கி
இரவுப்
பொழுதினில்
இனிமையாய்
மிளிர்வதால்’.....
நீ
மதநல்லிணக்கத்தின்
முதல்படி
அமாவாசைக்கும்
அப்துல்காதருக்கும்
ஓர் உறவுப்பாலம்
நீ
எட்ட
இருந்தாலும் வெற்றாய் இருப்பதனால்தான்
உன்னை
இன்றுவரை எம் மக்கள்
பத்திரப்பதிவு செய்திடாமல்
பால்வெளியில்
விட்டுவிட்டனர்
எட்டஇருந்தாலும்
ஒட்டியநட்பினைப்போல்
மனம்கனத்த
நேரமெல்லாம்
மயில்
இறகால் மனம் வருடும்
உன்
தோழமைக்கு
என்வணக்கம்
ச.பாலசுப்பிரமணிய
பாரதி.